தமிழில் blogging செய்வது

தமிழில் எப்படி blog செய்வது என்று ஒரு திடீர் கேள்வி, மின்னலை போல் என்னை அடித்தது. தேடினேன் தேடினேன் Google, Yahoo இரன்டிலும் தேடினேன். முரசை பார்த்தேன் – புரியவில்லை. அழகியை பார்த்தேன் – ஐநூறு ரூபாய் கோடுத்து வாங்கினேன். தமிழில் தட்டச்சு அடிக்க முடியாமல் முழித்தேன். அதற்கு பின் தான் குரளை கண்டேன். அதன் எளிமையில் மயங்கினேன். தமிழ் blogging களத்தில் இரங்கியுள்ளேன்.

“அதெல்லாம் இருக்கட்டும்… ஏன் நீங்க தமிழில் தட்டச்ச கூடாது?” என்று கேட்ட ரஜினிராம்கிக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு, திருக்குற்ளை கரைத்து குடித்து ஏப்பம் விட்டு எல்லோருக்கும் முன்பாக தமிழில் blog செய்ய ஆரம்பித்த ரெக்சுக்கு மற்றொரு வணக்கத்தை போட்டுவிட்டு இந்த முயற்சியில் இரங்குகிரேன்.

4 thoughts to “தமிழில் blogging செய்வது”

 1. கலக்கீட்ட நவீன். தமிழில் தட்டச்சு செய்வது கடுமையான-எளிமையான விசயம் (couldn’t resist the oxymoron). என்னிடம் ஒரு UTF-8 Javascript/HTML கோப்பு உள்ளது. ஒரு ஈழத்தமிழரின் நுண்மான் நுழைபுலத்தால் உருவாக்கப்பட்ட அந்த கோப்பை நான் இணையத்திலிருந்து சுட்டேன். எளிமையான விசயம் என்னவென்றால் நீ அதில் மேல் பகுதியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய செய்ய அஃது கீழே தமிழில் transliterate ஆகும். ஆனால் கடினமானது என்னெவெனில் நீ ஆங்கிலமும் தமிழையும் ஒரே கோப்பில் இணைந்து தட்டச்சு செய்ய முடியாது, எனென்றால் நீ ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதையும் அஃது transliterate செய்துவிடும். ஆக கூட்டி கழித்துப் பார்த்தால் முரசு அஞ்சலுக்கே என் ஓட்டு. அதில் நீ MRT or MTF முறையில் கோப்பை சேமித்து, பின்னர் அதனை Unicode ஆக மாற்றலாம். பின்னர் உன்னுடைய இணையத்தில் Unicode ஆக பதிப்பிக்கலாம்.

  தாய்மொழியாம் தமிழில் நீ எடுத்திருக்கும் முயற்சிக்கு என் பாராட்டுக்கள். உன்னை நோக்கி அக்காலத்தில் உன் தமிழறிவை கேலி செய்த தமிழ் வாத்தியார்களான மயில்சாமியின் மந்திர மிரட்டல்கலும்(“ஏய் கேடு கெட்டவனே”), அமல்ராஜின் அருமை வார்த்தைகளும் (“டேய் கழிசடை”) இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அப்பொழுதெல்லாம் தமிழ் என்றாலே முகம் சுழிக்கும் உனக்கு தமிழ்பால் ஏன் இந்த திடீர்க் காதல் என்று நினைக்கும்போது, உண்மையிலேயே நீ அனுப்பிய கலைஞர் கருணா நிதியின் அந்நியன் படம் (email) உன்னை மிரட்டியிருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

  அருமையான முயற்சி. மிக்க மகிழ்ச்சி. தமிழுக்கே உரிய சில சருக்கல்கள் ஆங்காங்கே இருந்தாலும், உன்னுடைய முயற்சி மிகவும் போற்றத்தக்கது. தொடர்ந்து படிக்க பெரு அவாவுடன் இருக்கின்றேன். வாழ்க வளர்க.

  வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்!

  என்றும் அன்புடன்,
  ரெக்ஸ்

 2. By Kanags on 02.25.06 3:29 pm
  //வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்!//
  🙂

  :-):-):-) Thanks for putting that smiley as I myself had forgotten to put the same 🙂 :-):-)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.